மனநிலை பாதித்த மகனை எரித்துக் கொன்ற தந்தை: பின்னணியில் நடந்தது என்ன?

ஃபஹத்
ஃபஹத்

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் திருச்சூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் (60). இவருடைய மனைவி செரீனா. இவர்களுடைய மகன் ஃபஹத் (23). இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று செரீனா வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டின் வராண்டாவில் ஃபஹத் இருந்துள்ளார்.

அப்போது அங்கு பெட்ரோல் கேனுடன் வந்த சுலைமான், திடீரென தனது மகன் ஃபஹத் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதனால் ஃபஹத் அலறி துடித்தார். அப்போது சுலைமானுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து இருவரையும் மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஃபஹத் உயிரிழந்தார். சுலைமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் திருச்சூர் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது," கடந்த 23 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட தன் மகன் படும் துயரத்தைப் பொறுக்க முடியவில்லை. இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்தேன்" என்று போலீஸாரிடம் சுலைமான் தெரிவித்துள்ளார். அவரும் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in