மகளைத் துரத்தி துரத்தி 25 முறைக் கத்தியால் குத்திக்கொன்ற வெறி பிடித்த தந்தை: பதற வைக்கும் வீடியோ!

தாயை கத்தியால் குத்துவதை தடுக்கும் மகள்கள்.
தாயை கத்தியால் குத்துவதை தடுக்கும் மகள்கள்.மகளைத் துரத்தி துரத்தி 25 முறைக் கத்தியால் குத்திக்கொன்ற வெறி பிடித்த தந்தை: பதற வைக்கும் வீடியோ!

தனது மகளை 25 முறை கத்தியால் அவரது தந்தைக் குத்திக்கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சத்யா நகர் சொசைட்டியைச் சேர்ந்த தொழிலாளி ராமானுஜர். இவரது மனைவி ரேகா. இவர்கள் குடும்பத்துடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ராமானுஜர் தனது மனைவி, மகளைக் கத்தியால் சரமாரியாகக் குத்தும் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 18-ம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் மகள் தூங்குவது தொடர்பாக ராமானுஜருக்கும், அவரது மனைவி ரேகாவிற்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அன்று இரவு 11.20 மணியளவில் தனது குழந்தைகள் முன்னிலையில் மனைவி ரேகாவை கத்தியால் ராமானுஜர் குத்தியுள்ளார். இதை அவரது மகள்கள் தடுத்துள்ளனர். அவரிடமிருந்து கத்தியைக் பறிக்க முயன்றுள்ளனர். இந்த தாக்குதலில் ரேகாவிற்கு காயம் ஏற்பட்டது. அப்படியும் ஆத்திரம் தீராத ராமானுஜர் மீண்டும் மனைவியைக் குத்த முயன்றுள்ளார்.

அப்போது அதைத்தடுத்த 22 வயது மகளைக் கத்தியால் சரமாரியாக ராமானுஜர் குத்தினார். இதனால் உயிருக்குப் பயந்து அறைக்குள் ஓடிய மகளைத் துரத்திச் சென்று 25-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் ராமானுஜர் குத்தினார். இதில் அவரது மகள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தப்பித்து ஓடும் மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார்.
தப்பித்து ஓடும் மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார்.மகளைத் துரத்தி துரத்தி 25 முறைக் கத்தியால் குத்திக்கொன்ற வெறி பிடித்த தந்தை: பதற வைக்கும் வீடியோ!

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து ராமானுஜரை கைது செய்தனர். அவரிடமிருந்த கத்தியையும் பறிமுதல் செய்யப்பட்டது. காயமடைந்த ரேகா உள்ளிட்ட அவரது குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தனது மகளை ராமானுஜர் கத்தியால் சரமாரியாகக் குத்திக்கொலை செய்யும் வீடியோ இன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் 16 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவத்தின் சுவடு மறையும் முன் அதே போன்ற சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in