
உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் மேல் கொடியேற்றியதாற்காக தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட வீடியோ வைரலாக பரவியது, அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் பகத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலிகஞ்ச் புதன்பூர் கிராமத்தில் நடந்தது என்பது தெரிய வந்தது.
விசாரணையில், ஆடைகள் விற்கும் வியாபாரியான ரயீஸ், அவரது மகன் சல்மான் ஆகிய இருவரும் பாகிஸ்தானின் பச்சை மற்றும் வெள்ளை நிறக்கொடியை அவர்களது வீட்டின் மேல் ஏற்றியது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து காவல் நிலைய பொறுப்பாளர் குல்தீப் குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கொடியை இறக்குவதற்கு முனபு ரயீஸின் செயல்களை போலீஸார் கேமராவில் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படடு தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் கொடியை ஏற்றிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.