தும்பிக்கையால் சுற்றிவளைத்த யானை: மின்னல் வேக தந்தையால் தப்பிய மகன்

தும்பிக்கையால் சுற்றிவளைத்த யானை: மின்னல் வேக தந்தையால் தப்பிய மகன்

உணவு கொடுக்க முயன்ற மகனை, யானை தும்பிக்கையால் சுற்றிவளைத்ததால் மின்னல் வேகத்தில் தந்தை செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றன.

கேரள மாநிலம், மலப்புரம் கீழ்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவர் சொந்தமாக யானை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் தனது 4 வயது மகனுடன் சென்று அந்தயானைக்கு உணவளிக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென மிரண்ட யானை, அருகில் சென்ற சிறுவனை தனது தும்பிக்கையால் சுற்றி வளைத்தது.

உடனே மின்னல் வேகத்தில் செயல்பட்ட தந்தை, யானையிடம் இருந்து மகனை மீட்டார். இதுகுறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.