7 வயது மகனை கழுத்தை அறுத்து நரபலி கொடுத்த தந்தை: மூடநம்பிக்கையால் பிஹாரில் நடந்த கொடூரம்

7 வயது மகனை கழுத்தை அறுத்து  நரபலி கொடுத்த தந்தை: மூடநம்பிக்கையால் பிஹாரில் நடந்த கொடூரம்

பிஹாரில் தனது 7 வயது மகனை தந்தையே கழுத்தை அறுத்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம் பாங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் சர்மா. இவரது மனைவி குஷ்பூ தேவி. இவர்களுக்கு ராகவ் குமார்(7). தீபத் சர்மா மந்திர, தந்திரம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் அளவு கடந்த நம்பிக்கை உள்ளவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராகவ்குமார் வீட்டில் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதைப்பார்த்து அவரது தாய் குஷ்பூ தேவி அதிர்ச்சியடைந்தார்.யார் தன்னுடைய மகனை கொலை செய்தது என்று தெரியாமல் திகைத்த குஷ்பூ தேவி, இக்கொலை குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ராகவ்குமாரை உடலை மீட்டனர். அப்போது அந்த வீட்டில் பூஜை செய்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன. அதனால் ராகவ் குமார் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்தக் கொலையை ராகவ்குமாரின் தந்தை தீபக்சர்மா செய்திருக்கலாம் என்று போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது மகனை அவர் நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டார். 7 வயது மகனை மூடநம்பிக்கை காரணமாக கொலை செய்த தீபக்சர்மாவை நேற்று போலீஸார் கைது செய்தனர். அவர் தன் மகனை மட்டும் தான் நரபலி கொடுத்துள்ளாரா அல்லது வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீபக் சர்மா அறையைச் சோதனையைட்டனர். அப்போது அங்கிருந்த சென்சார் செய்யப்பட்ட கேமரா, பென்டிரைவ் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பெற்ற மகனை தந்தையே கழுத்தை அறுத்து நரபலி செய்த சம்பவம் பிஹாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in