குழந்தையைக் கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர்: தந்தையையும் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்

கொலை
கொலை

நெல்லையில் உள்ள விடுதி ஒன்றில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தன் தந்தையை மகனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனவே தன் பச்சிளங் குழந்தையையும் கொலை செய்தவர் ஆவார்.

தென்காசி மாவட்டம், புதுக்குடி கம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(47) இவரது மகன் மாரி செல்வம்(26) பொறியாளராக உள்ளார். மாரிசெல்வத்திற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை நெல்லையில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் காட்ட அழைத்துவந்தார் ஆறுமுகம்.

இரவு வெகுநேரமாகி விட்டதால் இன்று மருத்துவரைச் சந்திக்கலாம் என நெல்லையிலேயே விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கினர். இந்நிலையில் இன்று அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்த மாரி செல்வம், தன் அருகில் படுத்திருந்த தன் தந்தை ஆறுமுகத்தை கழுத்தை அறுத்துக் கொலைசெய்தார்.

மேலப்பாளையம் போலீஸார் இதுகுறித்து விசாரித்த போது அதிரவைக்கும் தகவல் கிடைத்தன. மாரி செல்வம் கோவையில் வேலைசெய்தபோது, ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த இருபதுநாளில் குழந்தையையும் எடுத்துக்கொண்டு மாரி செல்வமும், அவரது மனைவியும் ரயிலில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தம்பதிக்குள் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த மாரிசெல்வம் பிறந்து 20 நாட்களேயான தன் குழந்தையை ரயிலில் இருந்து தூக்கிவீசினார். இதில் குழந்தை இறந்துபோனது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மாரி செல்வம் மூன்றுமாதங்கள் சிறையில் இருந்தார். அவரது தந்தை உடனடியாக ஜாமீனில் எடுக்கவில்லை என்னும் கோபம் அவருக்கு இருந்தது. அந்தக் கோபத்தில்தான் மாரி செல்வம் தன் தந்தையைக் கொலை செய்தது தெரியவந்தது. அவருக்கு வேறு ஏதும் உளவியல் சிக்கல் இருக்கிறதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in