சுத்தியலால் அடித்து மருமகளைக் கொலை செய்த மாமனார்: சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்!

மருமகள் கொலை
மருமகள் கொலைசுத்தியலால் அடித்து மருமகளைக் கொலை செய்த மாமனார்: சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்!
Updated on
1 min read

மைசூரில் மருமகள் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த அவரது 70 வயது மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹரோஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தய்யா(70). இவரது மகனுக்கும் கவிதாவிற்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், கணவரின் வருமானம் போதாததால், தனியார் கல்லூரியில் உதவியாளராக கவிதா வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். ஆனால், அவர் வேலைக்குச் செல்வதை அவரது மாமனார் கந்தய்யா ஏற்கவில்லை. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலைக்குச் செல்லும் மருமகள் நடத்தையில் கந்தய்யா சந்தேகப்பட்டார். அதனால் வேலையை விட்டு நிற்கச் சொன்னார். ஆனால், கவிதா வேலையை விட மறுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கவிதாவை கந்தய்யா சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார்.

இதையடுத்து அவரை வருணா போலீஸார் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மருமகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மாமனார் கொலை செய்த சம்பவம் மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in