கழுத்து அறுப்பு, முகத்தில் ஆசிட் வீச்சு; உயிருக்குப் போராடும் மாணவி: மாமன் வெறிச் செயல்

கழுத்து அறுப்பு, முகத்தில் ஆசிட் வீச்சு; உயிருக்குப் போராடும் மாணவி: மாமன் வெறிச் செயல்

சிறுமியின் கழுத்தை அறுத்து முகத்தில் ஆசிட் வீசிய மாமாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசிலா (பெயர் மாற்றம்). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த சிறுமி திடீரென அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சிறுமி கழுத்து அறுக்கப்பட்டு முகத்தில் ஆசிட் வீசிய நிலையில் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி சுசிலாவை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் கோவர்த்தன ரெட்டி சிறுமியை தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தார். அதோடு சிறுமிக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் மாமாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொந்த மாமனே சிறுமியின் கழுத்தை அறுத்து, முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் நெல்லூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in