மின்னல் வேகத்தில் வந்த கார்… தூக்கி வீசப்பட்ட டூவீலர்: தந்தை, மகள் பலி

விபத்து
விபத்து

நெல்லை மாவட்டம், பணகுடியில் சாலை விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்(54). இவரது மகள் ஜான்சி(24). இவருக்குத் திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. இவர் வள்ளியூரில் உள்ள டெய்லரிங் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்து வந்தார். இன்று இவரது தந்தை அய்யப்பன் மொபைட்டில் ஜான்சியை வேலைக்குக் கொண்டு விடச்சென்றார். இவர்கள் பணகுடி முத்துசாமிபுரம், போக்குவரத்துத்தடுப்பைக் கடந்து சென்ற போது, அந்த வழியாக வேகமாகச் சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில் ஜான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் பணக்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த அய்யப்பனை மீட்டு, வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அய்யப்பன் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பணகுடி போலீஸார், காரை ஓட்டிவந்த டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in