என் மகளை கடத்திச் சென்றுவிட்டனர்; ட்விட்டரில் டிஜிபியை டேக் செய்த தந்தை: உஷாரானது போலீஸ்

என் மகளை கடத்திச் சென்றுவிட்டனர்; ட்விட்டரில் டிஜிபியை டேக் செய்த தந்தை: உஷாரானது போலீஸ்

தனது 12 வயது மகள் கடத்தப்பட்டுள்ளதாக தந்தை வைத்த கோரிக்கையை அடுத்து தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடத்தல்காரர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவையில் வசித்து வரும் அமேன் பி சிங் என்பவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது மகள் (மைனர்) நேற்று கடத்தப்பட்டாள். அதில் அவளது புகைப்படத்துடன் புகார் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் எனது மகளை கண்டுபிடிக்க உதவ வேண்டும்" என்று ரயில்வே காவல்துறை, தமிழக காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் தமிழகத்தின் அனைத்து ரயில்வே காவல்துறையினரையும் எச்சரித்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து, அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சிறுமியை எங்கே கடத்திச் சென்றார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in