கொலை வழக்கில் கைதான மகன்; ஒதுக்கித் தள்ளிய உறவுகள்: உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை

கொலை வழக்கில் கைதான மகன்; ஒதுக்கித் தள்ளிய உறவுகள்: உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை

கொலை வழக்கு ஒன்றில் மகன் கைதான நிலையில் அதனால் உறவுகள் சரிவர பேசாத அதிருப்தியில் அவரது தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் உள்ள கழுவன் திட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள தேவாலயத்திலும் தலைவராக உள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார். ராஜேந்திரனின் மகனுக்குத் திருமணம் முடிந்து தன் மனைவியுடன் ராஜேந்திரன் வீட்டில் வசித்து வருகிறார்.

அண்மையில் ராஜேந்திரனின் மகன் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இதில் இருந்து ஜாமீனில் வந்திருந்தார். கொலை வழக்கில் ராஜேந்திரனின் மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் பலரும் அவரிடம் சரிவர பேசுவது இல்லை. இதனால் ராஜேந்திரன் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனாலேயே தந்தை- மகனுக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தன் அறைக்குத் தூங்கச் சென்றார். ஆனால் அதன்பின்பு அவர் கதவைத் திறக்கவே இல்லை.

இன்று காலையில் வெகுநேரமாகியும் அறையைத் திறக்காததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி ஜன்னல் வழியாகப் பார்த்த போது விஷம் குடித்து ராஜேந்திரன் உயிர் இழந்து இருந்தார். களியக்காவிளை போலீஸார் விரைந்துவந்து அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in