தினமும் போதையில் சண்டை; பிரிந்து சென்ற மனைவி: கடப்பாரையால் மகனை கொடூரமாக கொன்ற தந்தை

கொலை
கொலை

தினமும் குடித்துவிட்டு வந்து மதுபோதையில் தகராறு செய்துவந்த மகனை தூங்கும்போது கடப்பாறையால் தாக்கி தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம், சேதுராயன்புதூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(52) விவசாயி. இவரது மகன் மகாராஜன்(24). இவருக்கு ஒரு பெண்ணிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தீராத குடிப்பழக்கம் கொண்ட மகாராஜன் வேலைக்கும் செல்வதில்லை. இவரது குடிபழக்கத்தாலேயே இவரது மனைவியும் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மகாராஜன் இன்னொரு பெண்ணுடன் பழகினார்.

இது எல்லாமே அவரது தந்தை ஆறுமுகத்திற்கு பிடிக்கவில்லை. இது போதாது என குடித்துவிட்டு வந்து தன் தந்தை ஆறுமுகத்திடமும் அடிக்கடி சண்டை போட்டுவந்தார். இந்நிலையில் நேற்று இரவும், மகாராஜன் நன்கு குடித்துவிட்டு வந்து தன் தந்தையிடம் தகராறு செய்தார். தொடர்ந்து குடிபோதையில் அங்கேயே தூங்கிவிட்டார். நள்ளிரவில் ஆறுமுகம் மகன் மீதுள்ள கோபத்தில் வீட்டில் விவசாயப் பயன்பாட்டிற்கு வைத்திருந்த கடப்பாறையால் தன் மகன் மகாராஜனின் தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மகாராஜன் உயிரிழந்தார். தொடர்ந்து ஆறுமுகம் மானூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மகனின் போதை வெறியால் தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in