குடிக்க திரும்ப திரும்ப பணம் கேட்டு டார்ச்சர்: தீபாவளி நாளில் மகனை கொன்ற தந்தை

கொலை
கொலை

தீபாவளி தினமான நேற்று டாஸ்மாக் கடைக்குப் போய் பலமுறை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மேலும், மேலும் குடிக்க பணம் கேட்டுத் தொந்தரவு செய்த மகனை தந்தைக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(63). இரும்பு வியாபாரி. இவரது மகன் கங்காதரன்(34). செல்வராஜ் தன் மகன் கங்காதரன் வீட்டில் தான் வசித்து வந்தார். நேற்று தீபாவளி நாள் என்பதால் கங்காதரன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைக்குப் போய் மது அருந்துவதும், வீட்டில் வந்து தன் தந்தை, மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்வதுமாக இருந்தார். தொடர்ந்து அவர் அப்படியே செய்து கொண்டிருக்க ஒருகட்டத்தில் கூடுதலாகக் குடிக்க பணம்கேட்டு தொந்தரவும் செய்தார். பணம் தராததால் தந்தை, மனைவி ஆகியோரை அவதூறாகவும் பேசத் தொடங்கினார்.

ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே போன செல்வராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தன் மகன் கங்காதரன் நெஞ்சில் குத்தினார். இதில் கங்காதரன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார். அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து மகனை கொலை செய்த தந்தை செல்வராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in