வேகமாக பரவும் எச்-1 என்-1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல்: வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை!

வேகமாக பரவும் எச்-1 என்-1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல்: வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை!

தமிழகத்தில் எச்1 என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையயில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் எச்1 என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் சிகிச்சை முறைகள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளார். அதில், `இந்த காய்ச்சலுக்கு திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் 100.4 டிகிரி வெப்பநிலையை 10 நாட்களில் அடைதல், தலைவலி, மூக்கடைப்பு மற்றும் உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை அறிகுறிகள். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அனைத்து மருத்துவமனையிலும் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாசப் பிரச்சினை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.

இந்த வகை பாதிப்புடன் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழ் குறைதல் ஆகிய பிரச்சினைகள் கண்டறியப்படும் பட்சத்தில் இன்ஃப்ளூவென்சா பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in