
சென்னையில் ஃபாஸ்புட் உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சிகளை வைத்து தரமற்ற உணவை விநியோகித்த கடைகளை அதிகாரிகள் இழுத்து மூடினர்.
தமிழகத்தில் ஃபாஸ்புட் கடைகள் காளான்கள் போல் முளைத்து வருகின்றன. இந்த உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தி பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுத வண்ணம் இருக்கிறது. இந்த கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுகளை சாப்பிடும் பொது மக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. பல நாட்களாக வைக்கப்பட்ட இறைச்சியை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது.
தொடர்பு புகாரைத் தொடர்ந்து தரமற்ற உணவகங்களை கண்டறிந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம் பகுதியில் ஃபாஸ்புட் உணவகத்தில் மோசமான நிலையில் இருந்த கறி வெட்டும் கட்டை மற்றும் கறியில் புழுக்கள் இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் உணவகத்தை ஆய்வு செய்தனர். அப்போது தரமற்ற உணவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதோடு, கெட்டுப்போன இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் சேர்ந்தனர். மேலும், உணவகத்தை மூடி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.