ராய்ப்பூர் கோயிலில் மாடல்கள் ‘ராம்ப் வாக்’ - கொதித்தெழுந்த பஜ்ரங் தள் அமைப்பினர்!

ராய்ப்பூர் கோயிலில் மாடல்கள் ‘ராம்ப் வாக்’ - கொதித்தெழுந்த பஜ்ரங் தள் அமைப்பினர்!

ராய்ப்பூரில் உள்ள கோயில் ஒன்றில் நேற்று நடந்த ஃபேஷன் ஷோவைக் கண்டித்து இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சாலாஸர் கோயிலில், நேற்று எஃப்டிசிஏ எனும் தனியார் நிறுவனம் சார்பில் ஃபேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தகவல் அறிந்து பஜ்ரங் தள் அமைப்பின் தொண்டர்கள் அங்கு சென்று போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து ராம்ப் வாக்கில் ஈடுபட்டிருந்த மாடல்கள் உடனடியாக அதை நிறுத்திக்கொண்டனர். தொடர்ந்து போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் அமைப்பினர், எஃப்டிசிஏ நிறுவனத்தைச் சேர்ந்த ஆரிஃப் மற்றும் மணீஷ் சோனி ஆகிய இருவர்தான் இந்த ஃபேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்தனர் எனக் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in