விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரானேன்: மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த வாலிபர் பேட்டி

சிவில் சர்வீஸ் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த சுபாஷ் கார்த்திக்
சிவில் சர்வீஸ் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த சுபாஷ் கார்த்திக்விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரானேன்: மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த வாலிபர் பேட்டி

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர்களது நிலையை அறிந்ததன் விளைவாக ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற வைராக்கியம் உருவானதாக சிவில் சர்வீஸ் தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம்பிடித்த மாணவர் சுபாஷ் கார்த்திக் தெரிவித்தார்.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் சுபாஷ் கார்த்திக் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தையும், தேசிய அளவில் 118-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சுபாஷ் கார்த்திக் கூறுகையில், ‘’கோவை வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி அக்ரி படித்தேன். பின்னர் இங்கேயே முதுகலை படிப்பும் படித்து வருகிறேன். எனது தந்தை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அக்கா, ஐ.டி ஊழியராக உள்ளார்.

படிக்கும் காலத்தில் ஒரு நாள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்து கூறினர். அவர்களின் வேதனை குறைகளைக் கேட்ட போது, நாமும் ஐஏஎஸ் படித்து அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நிலையை அடைய வேண்டும் என ஆசைபட்டேன்.

இதையடுத்து ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரானேன். ஆன்லைன் வகுப்பு மூலம் பயிற்சி பெற்று முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in