இன்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்... 4 மணி நேர மறியலுக்கு விவசாய சங்கத்தினர் மும்முரம்

ரயில்
ரயில்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பிலான தொடர் போராட்டங்களின் அங்கமாக, இன்றைய தினம் 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பாகி உள்ளது.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பல்வேறு விவசாய சங்கத்தினர் பேரணியாக கிளம்பினர். ஆனால் அவர்கள் டெல்லியில் நுழைய வாய்ப்பின்றி ஹரியாணா மாநில எல்லையிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதனையடுத்து, தங்களது போராட்ட வியூகத்தை மாற்றிய விவசாய சங்கங்கள் அதன் அங்கமாக இன்றைய தினம் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 4 மணி நேரத்துக்கு நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய வட இந்திய மாநிலங்களில் தீவிர ரயில் மறியல் போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் போராட்டத்தை தடுக்கும் நோக்கில், விவசாய சங்கங்களின் தலைவர்களை கைது செய்ய போலீஸார் தயாராகி வருகின்றனர். எனினும் முன்பே திட்டமிட்ட வகையில் ரயில்களை மறித்து, கைதாகும் முடிவில் விவசாயிகள் உள்ளனர்.

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் (கோப்பு படம்)
விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் (கோப்பு படம்)

இதனால் வட மாநிலங்களில் இந்த 4 மணி நேரத்துக்கு ரயில் சேவை முடங்க வாய்ப்பாகி உள்ளது. மறியல் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது அல்லது நிறுத்தி வைப்பது ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் இந்த ரயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தென் மாநிலங்களிலும் விவசாயிகள் தன்னிச்சையாக மறியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in