வீட்டில் குழந்தை பெற்றதால் டார்ச்சர்; கணவன், மனைவி மீது வழக்கு: களமிறங்கிய விவசாயிகள்!

வீட்டில் குழந்தை பெற்றதால் டார்ச்சர்; கணவன், மனைவி மீது வழக்கு: களமிறங்கிய விவசாயிகள்!

வீட்டில் குழந்தை பெற்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எருக்கூரைச் சேர்ந்த  ஜான் மனைவி பெல்சியா  தனது இரண்டாவது குழந்தை  பிரசவத்தை வீட்டிலேயே பார்த்துக் கொண்டார். தாயும் சேயும் நலமாக இருக்கும் நிலையில் சுகாதாரத்துறையினர் அவரை மருத்துவமனைக்கு வருமாறு மிரட்டினர். மறுத்துவிட்ட பெல்சியா -  ஜான் தம்பதியரை அன்று இரவு 20-க்கும் மேற்பட்ட போலீஸார் துணையுடன் வலுக்கட்டாயமாக நள்ளிரவு 12 மணிக்கு வீடு புகுந்து மருத்துவமனைக்கு வருமாறு மிரட்டினர்.

அத்துடன் அவர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக இயற்கை வாழ்வியலாளர் நலம் அறக்கட்டளை சுதாகர் மீதும்  கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை வாழ்வியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுக பிரசவத்தில் வீட்டில் குழந்தை பெற்றதற்காக  குற்றவாளியாக்கபட்ட எருக்கூரை சேர்ந்த பெல்சியா- ஜான் கிரிஸ்டோபர் மற்றும் சுதாகர் ஆகியோர் மீது  சட்டத்திற்கு புறம்பாக பொய் வழக்கு புனையப்பட்டதை கைவிடவும் நள்ளிரவில் வீடு புகுந்து அத்துமீறிய காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்  கே.வி. இளங்கீரன் தலைமையிலும் மற்றும் சீர்காழி வர்த்தக நல சங்கத் தலைவர் கோபு மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடமும்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும்  விவசாயிகள் தங்கள் கண்களை கட்டிக் கொண்டும் கைகளில் கயிறுகளை கட்டிக்கொண்டும் தமிழ் மரபு வழி மருத்துவத்தை எதிர்த்து  புனையப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரியும் மனு வழங்கி முறையிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in