மறைந்திருந்து பாய்ந்த கரடி: தோட்டத்துக்கு சென்ற விவசாயிக்கு நடந்த துயரம்

விவசாயி ராஜேந்திரன்
விவசாயி ராஜேந்திரன்

கொல்லிமலை அருகே தோட்டத்துக்குச் சென்ற விவசாயியை  கரடி தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள, வளப்பூர்நாடு பஞ்சாயத்து, ஓலையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவர் நேற்று  அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான  தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று  திடீரென பாய்ந்து வந்து, விவசாயி ராஜேந்திரனை தாக்கியது. கரடி கடித்ததில் அவரது கை, விரல் மற்றும் முதுகு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். 

அவரது அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் கரடி அங்கிருந்து ஓடிவிட்டது. அருகில் இருந்தவர்கள்  அவரை மீட்டு  செம்பேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வனத்துறையினர்  அப்பகுதிக்கு வந்து  கரடி நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்து வருகின்றனர். தோட்டத்துக்குச் சென்ற விவசாயியை  கரடி கடித்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in