வீட்டு வேலைக்கு உதவி செய்ய வந்த பிளஸ் 2 மாணவி கர்ப்பம்: 50 வயதான அண்டை வீட்டுக்காரர் கைது

சேகர்
சேகர்

மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டு வேலைகளில் உதவி செய்த  பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த 50 வயது கூலித்தொழிலாளி போக்சோ  சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்( 50) விவசாயி. இவருடைய மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் அதே பகுதியைச் சேர்ந்த அருகாமை வீட்டைச் சேர்ந்த  16 வயதுடைய பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், தனது ஓய்வு நேரங்களில்  விஜயாவிற்கு உதவியாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை சேகர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த மாணவி 4 மாத கர்ப்பமானார். இதுகுறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த  அவர்கள், சிதம்பரம்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். உதவிக்கு வந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள ஐம்பது வயது நபரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in