தலையில் விழுந்த மின்விசிறி : தேர்வு அறையில் கதறிய மாணவி

தலையில் விழுந்த மின்விசிறி : தேர்வு அறையில் கதறிய மாணவி

ஆந்திரா மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி தலையில் மின்விசிறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரராவில் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் சோமண்டிப்பள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது திடீரென மின்விசிறி விழுந்தது. இதனால் மாணவிகள் உள்ளிட்ட மாணவர்கள் பயத்தில் அலறினர்.

மின்விசிறி விழுந்ததில் ஒரு மாணவிக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ஆபத்தான நிலை இல்லையென அரசு மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதன் பின் மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். தேர்வறையில் மின்விசிறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in