பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் காலமானார்

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் காலமானார்

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன்(83). பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியான தீனதயாளன் கலைக்கூடம் என்ற பெயரில் தமிழகம் முழுதும் உள்ள கோயில்களில் இருந்து பழங்கால சிலைகளை திருடி வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு தீனதயாளன் வீட்டில் அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் சோதனை மேற்கொண்டு பஞ்சலோக சிலைகள், பழங்கால சிலைகள், ஓவியங்கள் என மொத்தம் 800க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் தீனதயாளின் கூடத்தில் புதைக்கப்பட்டிருந்த பல சிலைகளை போலீஸார் தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீனதயாளனை கைது செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், 1995-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் ஆத்தநல்லூரில் சிலை திருட்டு வழக்கு, 2005-ம் ஆண்டு பழவூரில் காணாமல் போன சிலை வழக்கு,

2013-ம் ஆண்டு விருதாச்சல சிலை திருட்டு வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் அவரை சாட்சியமாக சேர்த்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தீனதயாளன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தீனதயாளன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in