குடும்பக் கட்டுப்பாடு செய்தும் கர்ப்பம்... உயிரிழந்த மனைவி: நீதிமன்றத்தில் போராடி நிவாரணம் பெற்ற கணவர்

குடும்பக் கட்டுப்பாடு செய்தும் கர்ப்பம்... உயிரிழந்த மனைவி: நீதிமன்றத்தில் போராடி நிவாரணம் பெற்ற கணவர்

அரசு மருத்துவமனைகளில் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2016-ம் ஆண்டு பாலாஜி என்பவருடன் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பாடி அரசு மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குடும்ப கட்டுப்பாடு செய்தபின்பும் தான் கர்ப்பமானதால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து பாடி மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது அங்கு உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை

கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டபோது அது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை தவறும்பட்சத்தில் அதற்கான இழப்பீடாக 30 ஆயிரம் ரூபாய் தருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வேறு வழி இல்லாமல் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் , குடும்ப கட்டுப்பாடு தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மருத்துவ துறை அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி எந்த நிவாரணமும் தனக்கு வழங்கப்படவில்லை என்று கனிமொழி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.நித்தியா, இதேபோல நடந்த சம்பவத்திற்கு ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் சுமார் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார். மேலும் மனுதாரர் கூலித் தொழிலாளி என்றும் குடும்பம் வறுமையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குடும்ப கட்டுப்பாடு காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும், ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறி, அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.

மேலும் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை 60 நாட்கள் வரை இருந்தால் சிகிச்சை செலவு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எம். தண்டபாணி வழக்கை முடித்து வைத்து, மனுதாரருக்கு வேறு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் தனியாக வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in