வைரல் வீடியோ! பாஸ்போர்ட்டில் வரவு செலவு கணக்கு... புதுப்பிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

கேரளாவில் ஒருவரின் பாஸ்போர்ட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் வரவு, செலவு கணக்கு உள்ளிட்டவற்றை எழுதி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் மத்திய அரசு பாஸ்போர்ட் வழங்குகிறது. இந்த பாஸ்போர்ட்  குறிப்பிட்ட காலத்துக்கு பின் காலாவதியாகி விடும். அப்படி காலாவதியாகி விட்டால், அதனை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும்.

எனவே, பாஸ்போர்ட் வைத்திருக்கும் அனைவரும் அதனை அவ்வப்போது புதுப்பிப்பது வழக்கம். அந்த வகையில், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்ற கேரளவாசி ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர், தனது பாஸ்போர்ட் காலாவதியானதால், அதனை புதுப்பிக்கும் பொருட்டு அதனை எடுத்து பார்த்துள்ளார். ஆனால், அந்த பாஸ்போர்ட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள், தங்களது வீட்டு பட்ஜெட் மற்றும் சில செல்போன் நம்பர்களை எழுதி வைத்துள்ளனர். அதாவது, பாக்கெட் டைரி போன்று அதனை பயன்படுத்தியுள்ளனர். இதனை கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசை பட்டியலில்  80வது இடத்தில் இருக்கும் இந்தியா,  உலகம் முழுவதும் 57 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. அதாவது, அந்த நாடுகளுக்கு செல்ல முன்பே விசா எடுக்க வேண்டியதில்லை. அந்த நாடுகளுக்கு சென்றவுடன் அங்கே  விசாவை எடுத்துக் கொள்ளலாம். 

பாஸ்போர்ட்டில் எழுதப்பட்டிருக்கும் கணக்கு
பாஸ்போர்ட்டில் எழுதப்பட்டிருக்கும் கணக்கு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in