வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ வெளியீடு: பீகாரில் ஒருவர் அதிரடியாக கைது

கைது
கைதுவடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ வெளியீடு: பீகாரில் ஒருவர் அதிரடியாக கைது

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாக போலி வீடியோவை வெளியிட்டதாக பீகாரைச் சேர்ந்த ஒருவரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை வெளியிட்டு வதந்திப் பரப்பியதற்காக, பிகார் மாநிலத்தின் ஜமூன் மாவட்டத்தைச் சேர்ந்த அமன்குமார் என்பவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோக்களால், பீகார் மாநில சட்டசபையிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. எனவே இது தொடர்பாக உண்மை நிலையைக் கண்டறிய பீகார் மாநிலக்குழு ஒன்று தமிழகம் வந்துள்ளது.

அதே நேரத்தில், வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ போலியானது என்றும், தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in