வங்கி முன் இருந்த ஏடிஎம்மில் கள்ளநோட்டு டெபாசிட்; பதறிய ஊழியர்கள்: சிக்கிய டைல்ஸ் கடைக்காரர்

வங்கி முன் இருந்த ஏடிஎம்மில் கள்ளநோட்டு டெபாசிட்; பதறிய ஊழியர்கள்: சிக்கிய டைல்ஸ் கடைக்காரர்
வங்கி முன் இருந்த ஏடிஎம்மில் கள்ளநோட்டு டெபாசிட்; பதறிய ஊழியர்கள்: சிக்கிய டைல்ஸ் கடைக்காரர்

ஏடிஎம் வழியே கள்ளநோட்டுக்களை டெபாசிட் செய்த டைல்ஸ் கடைக்காரர் மீது போடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது கிருஷ்ணா நகர். இங்கு தனியார் வங்கி ஒன்று உள்ளது. அந்த வங்கியின் வாசலிலேயே ஏடிஎம் இயந்திரமும் உள்ளது. அதில் பணத்தைச் செலுத்தவும், பணம் எடுக்கவும் தனித்தனியே இயந்திரங்கள் உள்ளன. இங்கு அண்மையில் 500 ரூபாய் தாள்களில் 8 கள்ளநோட்டுகள் இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

மாலையில் வங்கித்தரப்பினர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை எடுத்தபோது அதில் 4000 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் நோடல் அலுவலர் கார்த்திக், இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார், வங்கியின் சிசிடிவி கேமராக் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் வங்கியில் கள்ளநோட்டுகளை ஏடிஎம் வழியே டெபாசிட் செய்தது, தேவாரம் மெயின் ரோட்டில் டைல்ஸ் கடை நடத்திவரும் கோகுல் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவருக்கு கள்ளநோட்டுக் கும்பலோடு நேரடித் தொடர்பு உள்ளதா? அல்லது அவருக்கே தெரியாமல் தான் டெபாசிட் செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in