அரசு வேலை வாங்கித் தருவதாக வசூல் வேட்டை: சிக்கிய போலி பெண் வருமான வரித்துறை அதிகாரி

போலி வருமான வரித்துறை அதிகாரி ராமலட்சுமி.
போலி வருமான வரித்துறை அதிகாரி ராமலட்சுமி.அரசு வேலை வாங்கித்தருவதாக வசூல் வேட்டை: சிக்கிய போலி பெண் வருமான வரித்துறை அதிகாரி

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக கோவையில் பெண்களை ஏமாற்றிய போலி பெண் வருமானவரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண் வந்து தங்கியுள்ளார். எம்.காம். பட்டதாரியான ராமலட்சுமி, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கூறியுள்ளதுடன், வருமான வரித்துறையில் அதிகாரியாக பணிபுரிவதாக அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் கூறியுள்ளார். அவரது நடை, உடை பாவனைகளைப் பார்த்து வருமானவரித்துறை அதிகாரி என அங்கிருந்த பெண்கள் நம்பியுள்ளனர்.

இப்படி நம்பிய பெண்களிடம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ராமலட்சுமி பல ஆயிரம் ரூபாயை வசூல் செய்துள்ளார். சில பெண்களிடம் லேப்டாப்களைப் பெற்றுள்ளார். இந்த நிலையில் விடுதியில் இருந்து ராமலட்சுமி திடீரென மாயமானார். அவர் நீண்ட நாட்களாக விடுதிக்குத் திரும்பாததால், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த விடுதிப் பெண்கள், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, பல ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் லட்சக்கணக்கான ரூபாயை ராமலட்சுமி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர். அவருக்குக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்ற விசாரணையையும் கோவை மாநகர போலீஸார் நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in