படித்தது பத்தாம் வகுப்பு; பார்த்தது மருத்துவர் தொழில்: சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சி அளித்த போலி டாக்டர்!

படித்தது பத்தாம் வகுப்பு; பார்த்தது மருத்துவர் தொழில்: சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சி அளித்த போலி டாக்டர்!

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மீது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சூணாம்பேடு வட்டார சுகாதார மேற்பார்வையாளருக்குப் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வனத்தையன் கடப்பாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது சிவா என்பவர் மருத்துவம் படிக்காமல், வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவராக அப்பகுதியில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

இதையடுத்து வட்டார மேற்பார்வையாளர் வனத்தையன் கடப்பாக்கம் காவல் நிலையத்தில் சிவா மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சிவாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடப்பாக்கம் பகுதியில் அடிக்கடி போலி மருத்துவர்கள் பிடிபட்டாலும், தொடர்ந்து போலி மருத்துவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அதுபோல் சூணாம்பேடு பகுதியில் பெரும்பாலும் போலி மருத்துவர்களே அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் மீது சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in