புற்றுநோய்க்கும் போலி மருந்துகள் - மருத்துவர் உட்பட மோசடி கும்பல் சிக்கியது!

புற்றுநோய்க்கும் போலி மருந்துகள் - மருத்துவர் உட்பட மோசடி கும்பல் சிக்கியது!

புற்றுநோய்க்கான போலி மருந்துகளை தயாரிக்கும் கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்

8 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி புற்றுநோய் மருந்துகளை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய குற்றப்பிரிவு சிறப்பு காவல் ஆணையர் ஆர்.எஸ்.யாதவ், “சந்தையில் ரூ.8 கோடி மதிப்பிலான போலி புற்றுநோய் மருந்துகளை நாங்கள் மீட்டுள்ளோம். கடந்த 3-4 ஆண்டுகளாக இந்த மோசடி நடந்துள்ளது. இவர்கள் இரண்டு முறை வெவ்வேறு இடங்களை மாற்றி போலி மருந்து தயாரித்துள்ளனர். இது தொடர்பாக 2 பொறியாளர்கள், ஒரு மருத்துவர் மற்றும் எம்பிஏ பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை விரைவில் கைது செய்ய தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலியான உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் காஜியாபாத்தில் ஒரு குடோன் முடக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in