ஆந்திரா, தெலங்கானாவில் அதிகாரிகளை மிரட்டி ஒரு கோடி ரூபாய் பறித்த போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணா. இவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 2019-ம் ஆண்டு முதல் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் இருக்கும் அதிகாரிகளை குறிவைத்து ஜெயகிருஷ்ணா பணம் பறித்து வந்துள்ளார். அப்போது, அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் ஜெயகிருஷ்ணா, தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என அறிமுகம் செய்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறித்த ஜெயகிருஷ்ணாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.