அதிகாலையில் பற்றி எரிந்த தொழிற்சாலை: பறிபோன 3 தொழிலாளர்களின் உயிர்

அதிகாலையில் பற்றி எரிந்த தொழிற்சாலை: பறிபோன 3 தொழிலாளர்களின் உயிர்

ஆந்திராவில் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் பாஸ்கர் என்பவர் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு இன்று அதிகாலையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகி பாஸ்கர், தில்லி பாபு,பாலாஜி ஆகியோர் பலியாயினர். மேலும் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் முதல் தளத்தில் தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவு அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் உரிமையாளர் பாஸ்கர் அதே கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தார். அவரது மகன் டில்லிபாபுவின் பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில் அவரது கம்பெனியில் மூன்று பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in