ஃபேஸ்புக் ரீல்ஸ் நீளம் மேலும் அதிகரிப்பு: மெட்டா அறிவிப்பு

ஃபேஸ்புக் ரீல்ஸ்
ஃபேஸ்புக் ரீல்ஸ்

ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் ’ரீல்ஸ்’ நீளத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள மெட்டா நிறுவனம் புதிய ஏற்பாடு செய்துள்ளது.

சமூக ஊடகங்கள் மத்தியில் பத்திகளில் பதிவுகள் இட்ட காலம் மலையேறி, குறு வீடியோக்களை பகிர்வதன் போக்கு அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் காலம் குறு வீடியோக்களுக்கான காலம் என்பதால், அதனை நம்பி புதிய சமூக ஊடக செயலிகள் அறிமுகமாகி வருகின்றன. அவற்றின் போட்டியை சமாளிக்க ஃபேஸ்புக் நிறுவனம், தனது ரீல்ஸ் நீளத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள புதிய ஏற்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திகொண்டுள்ளது. சகோதர நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, மெட்டாவின் இன்னொரு சமூக ஊடக தளமான ஃபேஸ்புக்கில் ரீல்ஸ் வசதி அறிமுகமானது.

பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த வசதியை, புதிய குறு வீடியோ செயலிகளின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், அவ்வப்போது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது ஃபேஸ்புக். அதன்படி 60 விநாடிகளாக இருந்த ஃபேஸ்புக் ரீல்ஸ் நீளத்தை 90 விநாடிகளாக உயர்த்தி மெட்டா அறிவித்துள்ளது.

இதன் மூலம் கிரியேட்டர்கள் கூடுதல் நீளத்துடன் ரீல்ஸ் பதிவிட முடிவதுடன், மெமரியிலிருந்து ரெடிமேட் ரீல்ஸ் வெளியிடுவது, க்ரூவ்ஸ், டெம்ப்லேட்ஸ் உள்ளிட்ட வசதிகளையும் இத்துடன் வழங்குகிறது. இதன் மூலம் ரீல்ஸ் பதிவுகளில் பித்தான இளம் தலைமுறையினரை தக்கவைத்துக் கொள்ளவும் ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in