மதுரையில் அடாவடி... பைக்கில் சென்ற வாலிபரை துரத்திச் சென்ற கும்பல்... வழிமறித்து பணம் பறித்த கொடுமை!

மதுரையில் அடாவடி... பைக்கில் சென்ற வாலிபரை துரத்திச் சென்ற கும்பல்... வழிமறித்து பணம் பறித்த கொடுமை!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபரிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பாலமுருகன் கோயில் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கவுதம் கார்த்திக் (18). இவர் கோரிப்பாளையம் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கார்த்திக்கை பின் தொடர்ந்து சென்றனர். ஒரு கட்டத்தில் அருகில் ஓட்டிச் சென்ற கும்பல், கார்த்திக்கின் சட்டைப்பையில் இருந்த 2 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து கார்த்திக் செல்லூர் காவல்துறையில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்துச் சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in