செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிப்பு

பயணிகளின் கனிவான கவனத்திற்கு..
செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையை மேலும் நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி இறுதி வாரம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695) பிப். 1 முதல் பிப். 22 வரை, புதன்கிழமைகளில் இரவு 9:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10:30 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07696) பிப்.3 முதல் பிப். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி 3 பெட்டி, குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி 2 பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி 10 பெட்டி, 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் 2 பெட்டி இணைக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in