பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே தற்போது வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயங்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) பிப்ரவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஜனவரி 20-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in