சபரிமலையில் இனி அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்படும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கை காரணமாக சபரிமலையில் தரிசன நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது கடந்த 16-ம் தேதி மாலையில் திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கூட்டமிகுதியின் காரணமாகத் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தரிசன நேரத்தை நீட்டிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக வழக்கமாக மாலை 4 மணிக்குத் திறக்கப்படும். இந்நிலையில் கூட்டத்தை தவிர்க்கும்வகையில் சபரிமலை சன்னிதான நடையானது, இனி 3 மணிக்கே திறக்கப்படும் என சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிக்க வருவோர் இணைய வழியில் முன்பதிவு செய்வதையும் இம்முறை கட்டாயமாக்கியுள்ளனர். அப்படி முன்பதிவு செய்யாமல் வருவோர், முன்பதிவு செய்ய வசதியாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் தேவசம்போர்டு சார்பில் இலவசமாகவே முன்பதிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in