விரைவு ரயில் விபத்து... பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு... 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

தடம் புரண்ட ரயிலின் பெட்டிகள்
தடம் புரண்ட ரயிலின் பெட்டிகள்

பீகாரில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இரண்டாவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யாவை நோக்கி வடகிழக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பீகாரில் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது  திடீரென ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. 21 ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. ரயிலில் பயணித்தவவர்கள் பெட்டிக்குள்ளயே தூக்கி வீசப்பட்டார்கள். இந்த  விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்தை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகள் மூலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடம் புரண்ட ரயில்
தடம் புரண்ட ரயில்

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக அறிந்து கொள்ள அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 97714 49971, 89056 97493, 83061 80542, 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி… தடம் புரண்ட விரைவு ரயில்... 6 பேர் பலி... பலர் காயம்!

ரூ. 3.48 கோடியை குப்பையில் கொட்டிய தமிழக அரசு; மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1,00,000 சிம்கார்டுகள் வீணடிப்பு!

HBD SNEHA : ‘புன்னகை இளவரசி’ நடிகை சிநேகா பிறந்தநாள்!

போலி சான்றிதழ்... 24 வருடமாக வேலை செய்த அரசு பள்ளி ஆசிரியை!

அதிர்ச்சி... நள்ளிரவில் வெடித்து சிதறிய செல்போன் சார்ஜர்; பற்றி எரிந்த வீடு... 3 பேருக்கு தீவிர சிகிச்சை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in