சிக்னல் பிரச்சினையால் நின்ற எக்ஸ்பிரஸ்: ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்!

சிக்னல் பிரச்சினையால் நின்ற எக்ஸ்பிரஸ்: ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் கடந்து செல்லும் மாணவ,  மாணவிகள்!

மதுரையில் ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் பள்ளி மாணவ, மாணவிகள் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து கடந்த 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பள்ளி செல்லும் நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் விரைவு ரயில் திடீரென சிக்னல் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லவிருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.

இதையடுத்து, மாணவ, மாணவிகள் ஆபத்தை உணராமல் பள்ளிக்கு விரைந்து செல்ல வேண்டும் என்பதற்காக ரயிலுக்கு அடியில் கடந்து சென்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in