மருந்து தயாரிப்பு ஆலையில் வெடித்துச் சிதறிய குழாய்; பறிபோன 3 அதிகாரிகளின் உயிர்: ஆந்திராவில் துயரம்

மருந்து தயாரிப்பு ஆலையில்  வெடித்துச் சிதறிய குழாய்;  பறிபோன 3  அதிகாரிகளின் உயிர்: ஆந்திராவில் துயரம்

ஆந்திராவில் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மூன்று அதிகாரிகள் இன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கௌரிப்பட்டினத்தில் மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது. இன்று இந்த ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தண்ணீர் மற்றும் ரசாயனங்கள் மறுசுழற்சி செய்யப்படும் பைப்லைனில் தொழிற்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதை சரி செய்யும் பணியில் ஆலையின் துணை மேலாளர், பணித்தள பொறுப்பாளர் மற்றும் லேப் டெக்னீசியன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதிக வெப்பநிலையால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக குழாய் திடீர் என வெடித்தது. இதனால் உடைந்த கண்ணாடித் துண்டுகள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் மீதும், ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீதும் பாய்ந்தது. இதில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்துறை அமைச்சர் வனிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மாதவி லதா அறிவித்துள்ளார். மருந்து தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in