மின் இணைப்பு + ஆதார்: அவகாசம் நீட்டிக்கப்படுகிறது?

மின் இணைப்பு + ஆதார்: அவகாசம் நீட்டிக்கப்படுகிறது?

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அரசு வழங்கிய அவகாசம் நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிய வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தமிழகத்தின் 2.36 கோடி பேர் மின் இணைப்பு பெற்றுள்ளனர். இவர்களுக்கு அப்பால் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விவசாயம் உள்ளிட்டவைக்கான இலவச மின் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் டிசம்பர் இறுதிக்குள், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்சார வாரியம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவகாசம் முடிய சில தினங்களே உள்ள நிலையில், அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மின்சார வாரியத்தின் இணையதளம் வாயிலாக, பொதுமக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இதற்கென சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் நாளது வரை சுமார் 1.40 கோடி மின் கணக்குகள் உரிய ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் ஒரு லட்சம் மின் இணைப்புகள் அவற்றின் ஆதாருடன் இணைக்க வேண்டி உள்ளது.

எனவே அவகாசத்தை நீட்டிப்பது குறித்தும், அதனை எத்தனை நாட்களுக்கு வழங்கலாம் என்பது குறித்தும் தமிழக மின் வாரியம் பரிசீலித்து வருகிறது. இதன் அடிப்படையில் அவகாச நீட்டிப்பு குறித்தான அதிகாரபூர்வ தகவல் அடுத்து வரும் நாட்களில் அறிவிப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in