பஞ்சாபில் பிரத்யேக பீர் ஷாப்கள் விரைவில் அறிமுகம்: நிதியமைச்சர் அறிவிப்பு

பிரத்யேக பீர் ஷாப்கள்
பிரத்யேக பீர் ஷாப்கள்பஞ்சாபில் பிரத்யேக பீர் ஷாப்கள் விரைவில் அறிமுகம்: நிதியமைச்சர் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் பிரத்யேக பீர் கடைகள் அமைக்கப்படும் என அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் நகராட்சி பகுதிகளில் பிரத்யேக பீர் கடைகளை திறக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, "பிற வகையான மதுபானங்கள் கிடைக்கும் பல்வேறு விற்பனை நிலையங்களில் பீர் விற்கப்படுகிறது, ஆனால் நவீன சமுதாயத்தில் பலர் அங்கு செல்ல விரும்புவதில்லை" என்று கூறினார்.

2023-24 நிதியாண்டுக்கான கலால் கொள்கைக்கு ரூ.9,754 கோடி வசூல் செய்யும் நோக்கில் மார்ச் 10ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆம் ஆத்மி அரசு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய சீமா, 2022-23 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு அறிமுகப்படுத்திய கலால் கொள்கையின் காரணமாக கலால் வருவாயில் சுமார் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார்.

கடந்த நிதியாண்டில் ரூ.6,100 கோடியாக இருந்த கலால் வரி வருவாய் 2022-23ல் ரூ.9,000 கோடியாக உயர்ந்துள்ளது என்றார். மாநிலத்தில் மதுபான மாஃபியாவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே வருமானம் அதிகரித்ததற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஒரு ஆண்டில் சட்டவிரோத மதுபானம் விற்றவர்கள் மீது மொத்தம் 6,317 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட 6000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.48 லட்சம் லிட்டர் சட்டவிரோத மதுபானமும், 1.74 லட்சம் லிட்டர் ‘லஹான்’ ( சாராயத்திற்கான மூலப்பொருள்) பறிமுதல் செய்யப்பட்டன எனவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in