பில்டிங் காண்ட்ராக்டர் வீடுகளில் அதிரடி சோதனை: பழநியில் சுங்கத்துறை அதிகாரிகளால் பரபரப்பு

பில்டிங் காண்ட்ராக்டர் வீடுகளில் அதிரடி சோதனை: பழநியில் சுங்கத்துறை அதிகாரிகளால் பரபரப்பு

பழநியில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பிரபல பில்டிங் காண்ட்ராக்டர் வீடுகளில் சோதனை செய்ததாக தகவல் பரவிய நிலையில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள முக்கிய நகைக்கடை அதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டிங் காண்ட்ராக்டர்கள் உள்ளிட்ட சிலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சேவை மற்றும் சரக்கு, மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். இதனையடுத்து, வரி ஏய்ப்பு தொடர்பான சோதனை நடப்பதாக தகவல் பரவியது.

சோதனையிட்ட அதிகாரிகள்
சோதனையிட்ட அதிகாரிகள்

தொடர்ந்து இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "ரூ. 25 கோடிக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் ஆகியோர் செலுத்தக்கூடிய ஜிஎஸ்டி வரியானது முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வந்ததாக தெரிவித்தனர். மேலும், கட்டுமான நிறுவனங்களுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் வரி செலுத்துவதில் தவறு செய்தால் அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்‌ குறித்தும் அறிவுறுத்தவே வந்ததாகவும், எப்போதும் தொழிலதிபர்களை நேரில் அழைத்து அறிவுறுத்தப்படும் நிலையில், தற்போது தாங்களே நேரில் வந்து அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தனர். இது வழக்கமான நடைமுறைதான்" என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in