புழல் ஏரி உபரிநீர் வெளியேற்றம் திடீர் அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

புழல் ஏரி உபரிநீர் வெளியேற்றம் திடீர் அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

புழல் ஏரியிலிருந்து இன்று காலை 10.30 மணியிலிருந்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து கரையோர மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழை காரணமாகப் புழல் ஏரியிலிருந்து 100 கன அடி அளவிற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

கனமழை காரணமாக 500 கன அடியாக உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டு மழை காரணமாக மீண்டும் 100 கன அடியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாகப் புழல் ஏரிக்கு வரும் நீரில் அளவும் அதிகரித்துள்ளது.  இதன் காரணமாகப் புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டும் உபரிநீரின் அளவு 100 கன அடியிலிருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரையோர கிராமங்களான நாரவாரிகுப்பம், கிராண்டலைன், சாமியார் மடம், தண்டல் கழனி, வடபெரும்பாக்கம், மணலி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் அதன் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கனமழை தொடரும் நிலையில் நீரின் அளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in