தேர்வில் ஆள்மாறாட்ட புகார் எதிரொலி: பாஜக மாவட்டத் தலைவர் கைது

பாஸ்கர்
பாஸ்கர்

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் அருகே உள்ள கிடாரம் கொண்டான் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்துவருகிறது. இதில் நேற்று பி.ஏ அரசியல் அறிவியல் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு நடந்தது.

நேற்று தேர்வு தொடங்கியபோது கண்காணிப்பாளர் ஹால் டிக்கெட்டை பரிசோதனை செய்தனர். அப்போது பாஸ்கர் என்பவருக்குப் பதில் வேறு ஒருவர் தேர்வு எழுத வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது, தேர்வெழுத வந்தவர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவைச் சேர்ந்த திவாகரன் என்பது தெரியவந்தது. இவர் உடற்கல்வியியல் படித்துவிட்டு தள்ளுவண்டியில் பிரியாணி வியாபாரம் செய்துவருகிறார்.

அவர் திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் என்பவர் தான் தன்னைத் தேர்வு எழுதிய அனுப்பியதாகச் சொன்னார். இதில் இவர்கள் இருவரும் நேற்றே கைது செய்யப்பட்டனர். இதில் ரமேஷ் பாஜக திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கருக்குப் பதிலாகவே தேர்வெழுத வந்தது உறுதியானது. பாஸ்கரின் வலியுறுத்தலில் தான், தேர்வு எழுத திவாகரனை அனுப்பியதாக மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேசும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கரை போலீஸார் இன்று அதிரடியாகக் கைதுசெய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பாஜகவின் மாவட்டத் தலைவர் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in