
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கின் முன்னாள் மனைவி தலுலா ரிலே தன்னை விட நான்கு வயது குறைவான பிரபல ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இதற்கு எலான் மஸ்க் கொடுத்துள்ள ரியாக்ஷன் பேசுபொருளாகியுள்ளது.
உலக அளவில் எப்போதுமே சர்ச்சை வெடிகளை கொளுத்திப்போடுவதில் வல்லவர் எலான் மஸ்க். கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலர்கள் செலவழித்து ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டரை வாங்கியது முதலே, அடிக்கடி சலசலப்புகளை பற்றவைத்துக் கொண்டிருக்கிறார் மஸ்க்.
இந்நிலையில் எலான் மஸ்க்கின் முன்னாள் மனைவி தலுலா ரிலே, தன்னை விட நான்கு வயது குறைந்த பிரபல நடிகரான தாமஸ் பிராடி சாங்ஸ்டரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. "கேம் ஆப் திரோன்ஸ்” திரைப்பட புகழ் தாமஸ் பிராடி சாங்ஸ்டர் உடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்து விட்டதாக தலுலா ரிலே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை தாமஸ் பிராடி சாங்ஸ்டரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக தாமஸ் பிராடி சாங்ஸ்டரும், தலுலா ரிலேவும் டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
முன்னாள் மனைவி தலுலா ரிலேவின் திருமணம் குறித்த பதிவிற்கு எலான் மஸ்க், ஹார்டின் எமோஜியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு இப்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகியுள்ளது. எலான் மஸ்க் மற்றும் தலுலா ரிலேவுக்கு இடையே கடந்த 2016ம் ஆண்டு விவாகரத்து நடந்தது