முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானார்

தேவிசிங் ஷெகாவத்
தேவிசிங் ஷெகாவத்முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் இன்று தனது 89வது வயதில் மாரடைப்பால் புனேயில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

தேவிசிங் ஷெகாவத் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். “மாரடைப்பு காரணமாக இன்று காலை 9 மணியளவில் அவர் காலமானார்” என்று மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. அவருக்கு மனைவி பிரதிபா பாட்டீல், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தேவிசிங் ஷெகாவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "டாக்டர். தேவிசிங் ஷெகாவத் ஜியின் மறைவு குறித்து எனது எண்ணங்கள் எங்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. அவர் தனது பல்வேறு சமூக சேவைகள் மூலம் முத்திரை பதித்தார். ஓம் சாந்தி" என்று ட்வீட் செய்துள்ளார்.

என்சிபி தலைவர் சரத் பவாரும் ஷெகாவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், "காங்கிரஸின் மூத்த தலைவரும், புகழ்பெற்ற விவசாயியுமான தேவிசிங் ஷெகாவத் ஜியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவர் அமராவதியின் முதல் மேயராக பணியாற்றினார்” என்று ட்வீட் செய்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தேவிசிங் ஷெகாவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in