பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்: கதவை உடைத்து போலீஸில் ஒப்படைத்த மக்கள்

பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்: கதவை உடைத்து போலீஸில் ஒப்படைத்த மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் காதலனை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், பாலோடு கலூர் பகுதியைச் சேர்ந்தவர் உன்னிக்குட்டன்(26). இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைக் காதலித்து வந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இவர்கள் சேர்ந்தே சுற்றியுள்ளனர். அப்போது உன்னிக்குட்டன் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த விஷயம், அந்த மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உன்னிகிருஷ்ணனோடு தொடர்பை கைவிடுமாறு சொல்ல, மாணவியும் அவருடனான காதலை விட்டுவிட்டார்.

இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினர் ஒரு விசேஷத்திற்குச் சென்றிருப்பதை அறிந்துகொண்டு உன்னிகிருஷ்ணன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது மாணவியை மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் சப்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வீட்டுக்குள் வந்தனர். உடனே உன்னிகிருஷ்ணன் அதே வீட்டின் இன்னொரு அறைக்குள் போய் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று உன்னிகுட்டனை போலீஸில் ஒப்படைத்தனர். போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in