தீபாவளி பண்டிகையான நாளை புயல் உருவானாலும்..: வெதர்மேன் என்ன சொல்கிறார்?

தீபாவளி பண்டிகையான நாளை புயல் உருவானாலும்..: வெதர்மேன் என்ன சொல்கிறார்?

தீபாவளி பண்டிகையான நாளை புயல் உருவானால் கூட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(அக்.24) புயலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதால், அப்போது, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் நாளை காலை மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது. பின்னர் வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை வங்காளதேச கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியான நாளை(அக்.24) புயல் உருவானாலும் கூட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஆனால், வட மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in