தமிழகத்தில் உள்ள அணைகளைப் பாதுகாக்க அமைப்பு: மண்டல அளவில் உறுப்பினர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ள அணைகளைப் பாதுகாக்க அமைப்பு: மண்டல அளவில் உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள அணைகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அரசின் சார்பில் மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அணைப் பாதுகாப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அரசிதழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் நீர்வளத்துறையின் தலைமை பொறியாளரின் தலைமையில் மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமை பொறியாளர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்களாக 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் ஆய்வு மேற்கொள்வது, பாதுகாப்பை உறுதி செய்வது, நீர் வருகை, வெளியேற்றத்தை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in